Page Loader
மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் மரணம்; திரையுலகினர் அதிர்ச்சி
மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் மரணம்

மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் மரணம்; திரையுலகினர் அதிர்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
May 29, 2025
10:55 am

செய்தி முன்னோட்டம்

மூத்த தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் வியாழக்கிழமை (மே 29) காலை சென்னையில் தனது 75 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பன்முக நடிப்புத் திறன் கொண்ட நடிப்புக்கு பெயர் பெற்ற ராஜேஷ், போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது உடல்நல கோளாறுகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை 8:15 மணியளவில் அவரது வீட்டில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், அவர் வருவதற்கு முன்பே காலமானார். இது திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ராஜேஷ்

நடிகர் ராஜேஷின் திரைப் பின்னணி

நடிகர் ராஜேஷ் 1979 ஆம் ஆண்டு ராஜ்கண்ணு இயக்கிய கன்னிப் பருவத்திலே திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முன்னதாக, 1974 ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினாலும், 47 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறப்பு மிக்க சினிமா வாழ்க்கைக்கான அடித்தளமாக கன்னிப் பருவத்திலே படம் அமைந்தது. அவர் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், ஹீரோ முதல் துணை வேடங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்கள் வரை பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமல்லாது, மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் ராஜேஷ் தனது முத்திரையைப் பதித்தார். மேலும் ஒரு டப்பிங் கலைஞர் மற்றும் எழுத்தாளராகவும் பன்முகத்தன்மை கொண்டவராக இருந்துள்ளார்.