வெங்கட் பிரபு, சினேகா நடிக்கும் 'ஷாட் பூட் த்ரீ ' திரைப்பட ட்ரைலர் வெளியானது
இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சினேகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் 'ஷாட் பூட் த்ரீ'. இப்படத்தினை 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தினை இயக்கிய அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கியுள்ளார். கலகலப்பான குடும்ப கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் கைலாஷ் ஹீட், பூவையார், யோகிபாபு, பிரணித்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ராஜேஷ் வைத்யா இசையமைத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 6ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது இதன் ட்ரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் அனைவராலும் விரும்பக்கூடிய படமாக அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.