'GOAT' படத்தில் கேப்டன் விஜயகாந்தை AI மூலமாக இயக்குனர் வெங்கட் பிரபு காட்டியது எப்படி?
இயக்குனர் வெங்கட் பிரபுவின் வரவிருக்கும் திரைப்படமான The Greatest of All Time (GOAT) இன்னும் இரு தினங்களில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரைக்கு வர உள்ளது. இந்தியா டுடே உடனான உரையாடல், தளபதி விஜய்யுடன் முதல் முறையாக பணிபுரிந்த அனுபவத்தை வெங்கட் பிரபு பகிர்ந்து கொண்டார். படத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டி-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார். இதோ மேலும் விவரங்கள்.
"விஜய்யை இயக்க முதலில் மிகவும் பயமாக இருந்தது"
விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து கேட்டபோது, விஜயயை இயக்க ஆரம்பத்தில் பயமாக இருந்ததாக வெங்கட் பிரபு கூறினார். இருப்பினும், தளபதி விஜய் அதை இலகுவாக்கி அனைவருக்கும் டென்ஷனை நீக்கிவிட்டார் என்றார் VP. இதை ஒரு "ஜாலியான ஒரு வருடம்" என்று விவரித்த இயக்குனர், "நாங்கள் உலகம் முழுவதும் பயணம் செய்தோம். ஸ்கிரிப்ட் ஒரு ஸ்பை த்ரில்லர் என்பதால் நாங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ், ரஷ்யா, துனிசியா மற்றும் ஆப்பிரிக்காவுக்குச் சென்றோம். இது ஒரு வேடிக்கையான மற்றும் உற்சாகமான அனுபவம்" என்றார்.
விஜய் ஏன் அப்பா, மகனாக நடித்தார் என்பதையும் விளக்கினார் VP
முதன்முதலில் ஸ்கிரிப்ட் எழுதும் போது, வயதை குறைக்கும் தொழில்நுட்பம் பற்றி தனக்கு தெரியாது என்று வெங்கட் பிரபு தெரிவித்தார். அப்பா மற்றும் மகன் கதாபாத்திரங்களை வெவ்வேறு நடிகர்களால் சித்தரிக்க அவர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார். இருப்பினும், அவரது நண்பர் ஒருவர்தான் இந்த டெக்னாலஜி பற்றி தனக்கு தெரிவித்ததாகவும், அவர் தான் இந்த இதனை சஜெஸ்ட் செய்ததாகவும் கூறினார். "முதலில் விஜய் எனது ஸ்கிரிப்ட் ஹாலிவுட் படமான ஜெமினி மேன் என்று நினைத்தார். கதையைச் சொல்லச் சொன்னார். ஆனால் ஜெமினி மேனில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தப் போகிறோம் என்று விளக்கினேன்" என்றார் வெங்கட் பிரபு.
மறைந்த விஜயகாந்தை மீண்டும் கொண்டு வர AI
மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே AI-ஐப் பயன்படுத்தி அவரை மீண்டும் அழைத்து வர முடிவு செய்ததாக தான் முடிவு செய்ததாக வெங்கட் பிரபு தெரிவித்தார். படமெடுத்து அவரது ஆசிர்வாதத்தைப் பெறத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவர்கள் அதை முடிப்பதற்குள், அவர் இறந்துவிட்டார் எனவும் வருந்தினார். "பின்னர் அவரது மனைவி பிரேமலதாவிடம் பேசினோம். முதலில் அவரது மகன் சங்முகபாண்டியனிடம் பேசினோம். அவர்களும் மனப்பூர்வமாக சம்மதித்தனர். முதலில் அவருக்கு மரியாதை செய்ய நினைத்தே இந்த ஐடியாவை யோசித்தோம், ஆனால் அது இப்போது அஞ்சலியாக மாறிவிட்டது." என வருத்தத்துடன் கூறினார் இயக்குனர்.
'1990களின் ஏக்கத்தை மீண்டும் கொண்டு வர விரும்பினேன்'
1990-களின் நடிகர்களின் குழுமத்தை ஒன்றிணைப்பது பற்றி கேட்டபோது, அது விஜய் மீது அவர்களுக்கு இருந்த காதல் என்று VP கூறினார். அவர் 1990களின் ஏக்கம் மற்றும் உணர்ச்சிகளை மீண்டும் கொண்டுவர விரும்பினார். "கதாநாயகிகள் சினேகா மற்றும் லைலா உடன், பிரசாந்த் மற்றும் பிரபுதேவாவும் நடித்துள்ளனர். அவர்கள் நண்பர்களாகவும் உயரடுக்கு உளவாளிகளாகவும் நடிக்கிறார்கள். அவர்கள் பொதுவான நண்பர்களைப் போல பேசக்கூடிய அனுபவமுள்ள உளவாளிகள்." "அவர்களது நட்பு, சண்டை சச்சரவுதான் படத்தின் கதை" "அனைவரையும் ஒருங்கிணைத்தது எனக்குப் பெரிய சாதனை" என பெருமை பொங்க கூறினார் VP.