Page Loader
வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' ட்ரைலர் வெளியானது 

வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' ட்ரைலர் வெளியானது 

எழுதியவர் Venkatalakshmi V
May 05, 2023
04:40 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டின் வெர்சடைல் இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு முதன்முறையாக தெலுங்கு திரையுலகில், 'கஸ்டடி' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், நாகர்ஜூனாவின் மகனுமாகிய நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் மூலம், நாகசைதன்யா நேரடியாக தமிழில் அறிமுகவுள்ளார். நாயகியாக க்ரித்தி ஷெட்டி மற்றும் வில்லனாக அரவிந்த் சுவாமி நடிக்கிறார்கள். இந்த படத்தின் டைட்டில், டீஸர், முதல் பாடல் ரிலீஸ் என அனைத்திற்கும் வித்தியாசமாக அறிவிப்பை வெளியிட்ட வெங்கட் பிரபு குழு, இன்று படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா என்று அப்பா-மகன் கூட்டணி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் ஏற்படுத்தி இருக்கும் கஸ்டடியின் பரபரப்பான டிரைலர் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

கஸ்டடி படத்தின் ட்ரைலர்!