Page Loader
பிரேம்ஜிக்கு திருமணம்! அவரது ஸ்டைலிலேயே வெங்கட் பிரபு வெளியிட்ட அறிக்கை
தாயாருடன் ப்ரேம்ஜியும் ,வெங்கட் பிரபுவும்

பிரேம்ஜிக்கு திருமணம்! அவரது ஸ்டைலிலேயே வெங்கட் பிரபு வெளியிட்ட அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2024
03:43 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜிக்கு வரும் 9ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இது பற்றிய செய்தி கடந்த சில நாட்களாக பரவி வந்த நிலையில், நேற்று அவரின் திருமண பத்திரிகை வைரலானது. இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு அவருடைய ஸ்டைலிலேயே, இதை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, "எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. பாகுபலி கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா? இது எல்லாவற்றையும் விட பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ என்ற உங்கள் கேள்விக்கு பதில் வரும் 9-ஆம் தேதி கிடைத்துவிடும்".

திருமணம்

எளிய முறையில் திருமண ஏற்பாடு

"சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருகிய நண்பர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவினர்களுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்" "இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண பத்திரிகையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விட்டார். எப்படி கல்யாண பத்திரிக்கை வைரலானதோ அதேபோல் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என்று கூறி புகைப்படங்கள் உலா வருகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களை பகிர்வேன்". "எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி, அதையும் வைரலாகுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். அதோடு விரைவில் GOAT அப்டேட் வெளியாகுமெனவும் கூறியுள்ளார் VP.

embed

VP அறிக்கை

With all ur love and blessings #PremgiKuKalyanam ❤️❤️❤️ pic.twitter.com/Vm5lV7Wdru— venkat prabhu (@vp_offl) June 5, 2024