
ஒரே நேரத்தில் 10 பிரம்மாண்ட படங்களைத் தயாரிக்கும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை உருவாக்கி வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியிடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்நிலையில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தினால் ஒரே நேரத்தில் 10 பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருவது திரையுலகில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்த தயாரிப்புகள் அனைத்தும் 2027 க்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தயாரிப்பு நிறுவனத்தை ஐசரி கணேஷ் வழிநடத்தி வருகிறார். இவர் முன்னதாக 'கோமாளி', 'எல்.கே.ஜி.', 'மூக்குத்தி அம்மன்', 'வெந்து தணிந்தது காடு' போன்ற வெற்றிப் படங்களை தயாரித்து வரலாற்று வெற்றி கண்டவர்.
நடப்பு தயாரிப்புகள்
நடப்பு தயாரிப்புகள் - இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பட்டியல்:
தனுஷ் நாயகனாக நடிக்கும் 3 படங்களை தயாரிக்கிறார். இவற்றை முறையே வெற்றிமாறன், விக்னேஷ் ராஜா (போர்த் தொழில் இயக்குநர்) மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்க உள்ளனர். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை சுந்தர் சி இயக்க, ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில், ரவி மோகன் நாயகனாக நடிக்க உள்ளார். மலையாளத்தில் வெற்றிபெற்ற ஜூட் ஆண்டனி படத்தின் ரீமேக்கில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, அந்த படத்தையும் தயாரிக்கிறார் ஐசரி கணேஷ். 'டாடா'படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கும் படம், விஷ்ணு விஷால் உடன் இரு படங்கள், மற்றும் 96 படத்தின் இரண்டாம் பாகமும் தயாரிப்பில் உள்ளது.