
தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமியின் திருமண புகைப்படங்கள் வெளியாயின
செய்தி முன்னோட்டம்
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்- நிகோலாய் சச்தேவ் திருமணம் தாய்லாந்தில் நடைபெற்றது.
இரு மத முறைப்படி நடைபெற்ற இந்த திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
முன்னதாக திருமணத்தின் முந்தைய நிகழ்வுகளான மெஹந்தி, சங்கீத் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்றது.
அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதனையடுத்து, தாய்லாந்திற்கு புறப்பட்டனர் வரலட்சுமியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்.
இந்த நிலையில் நேற்று இவர்களின் திருமணம் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.
அதில் நயன்தாராவை போலவே சிவப்பு நிற புடவையும், அலங்காரங்களையும் அணிந்திருந்த வரலட்சுமியை பார்த்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
வரலட்சுமியின் திருமண புகைப்படங்கள்
Varalaxmi Sarathkumar - Nicholai Wedding Pic😍#VaralaxmiSarathkumar #Varalaxmi #Varalaxmi #Nicholai #Marriage #beziquestreams #tamilactress #kollywood #kollywoodcinema #kollywoodmovie #tamilmovie #tamilcinema #celebrityclicks pic.twitter.com/m3neKIRsKn
— Bezique Streams (@BeziqueStreams) July 11, 2024