Page Loader
அடுத்த திருமணத்திற்கு தயாராகிறாரா வனிதா விஜயகுமார்? புதிய புகைப்படத்தால் குழம்பும் நெட்டிஸன்கள்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் வனிதா விஜயகுமார்

அடுத்த திருமணத்திற்கு தயாராகிறாரா வனிதா விஜயகுமார்? புதிய புகைப்படத்தால் குழம்பும் நெட்டிஸன்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 01, 2024
05:15 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் ஒரு பீச் பின்னணியில், மண்டியிட்டு ப்ரொபோஸ் செய்தது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, 'சேவ் தி டேட்' என குறிப்பிட்டு, அக்டோபர் 5ஆம் தேதி எனவும் தெரிவித்துள்ளார். இதை பார்த்ததும் ரசிகர்கள், வனிதா அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டாரா என குழம்பி வருகின்றனர். முன்னதாக ராபர்ட் மாஸ்டரும், வனிதாவும் சில காலம் காதலித்தனர் என்றும், லிவிங் டூகெதர்-ஆக வாழ்ந்ததாகவும் செய்திகள் வெளியானது. எனினும் பின்னர் இருவரும் பிரிந்தததாகவும் அறிவித்தனர். அதன்பின்னர் ராபர்ட் மாஸ்டர் அது தவறான செய்தி எனவும், தான் வனிதாவை காதலிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

உண்மை காரணம்

படத்திற்கான ப்ரோமோஷனா இந்த போட்டோ?

இந்த நிலையில் விகடன் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ராபர்ட் மாஸ்டரும், வனிதாவும் இணைந்து நடித்துள்ள படத்தின் பெயர் 'Mr&Mrs'. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில், படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியிட உள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கான எதிர்பார்ப்பை கிளப்பவே இத்தகைய புகைப்படத்தை வனிதா வெளியிட்டுள்ளார் எனவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது. முன்னதாக வனிதா விஜயகுமார் ரெகமண்ட் செய்து தான் ராபர்ட் மாஸ்டருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது எனவும் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் இவர்களுக்குள் உண்மையில் காதல் பூத்ததா இல்லையா என்பது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தெரியவரும்.