Page Loader
சர்ச்சையை கிளப்பிய இடஒதுக்கீடு தொடர்பான பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள 'வாத்தி' இயக்குனர்
'வாத்தி' பட இயக்குனர், வெங்கி அட்லூரி

சர்ச்சையை கிளப்பிய இடஒதுக்கீடு தொடர்பான பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள 'வாத்தி' இயக்குனர்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 27, 2023
09:38 am

செய்தி முன்னோட்டம்

'வாத்தி' பட இயக்குனர், வெங்கி அட்லூரி, சமீபத்தில், "ஒரு நாள் கல்வி அமைச்சரானால் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவேன்" எனகூறியிருந்தார். அவரின் அந்த பதில், கடும் கண்டனத்தை ஈர்த்தது. தன்னுடைய கருத்துக்கு விமர்சனங்கள் வலுத்து வருவதையடுத்து, அதற்கான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் இயக்குனர். "படிக்க விரும்பும் பல மாணவர்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக தங்கள் கனவைத் தொடர முடியாமல் போனதால், மாணவர்களின் தேவைக்கேற்ப இடங்களை ஒதுக்கித் தருவதாக" கூறியதாகவும், தனக்கு தமிழ் சரியாக பேச வராததால், தன்னுடைய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம், பள்ளிக் கல்வி முறைக்கு எதிரான நிலைப்பாட்டை பற்றி பேசுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

வெங்கி அட்லூரியின் விளக்கம்