
இடஒதுக்கீடு பற்றி கருத்து தெரிவித்த 'வாத்தி' இயக்குநர்: சர்ச்சையாகும் பேச்சு
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் வெளியான தனுஷ் படமான 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி, படத்தின் ப்ரோமோஷனுக்காக, தனியார் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.
அப்போது, ஒரு ஊடகவியலாளர், "ஒருவேளை நீங்கள் மத்திய கல்வியமைச்சரானால் உங்களின் பிரதான முடிவு என்னவாக இருக்கும்?" எனக்கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த இயக்குனர், "என் பதில் சர்ச்சையாக இருக்கலாம். ஆனால், தற்போது இருக்கும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து அறிவிப்பேன். இடஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாகத்தான் கொடுக்கப்பட வேண்டுமே தவிர, சாதி ரீதியாக கொடுக்கக் கூடாது" எனக்குறிப்பிட்டார்.
இந்த பதில் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சிலர் இயக்குனரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், பலர், இடஒதுக்கீடே நாட்டில் இருக்க கூடாது எனவும் தெரிவித்துவருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
இடஒதுக்கீடு பற்றி பேசிய 'வாத்தி' இயக்குனர்
#SIRMovie
— Kaushik (@partofdproblem) February 17, 2023
Education system midha cinema teeyadam kadu sir ,miku first education avasaram ,go read Ambedkar. pic.twitter.com/F6gQv4XOG0