
'வாத்தி' படத்தின் தலைப்பிற்கு எதிராக குரலெழுப்பும் புதுச்சேரி ஆசிரியர்கள்
செய்தி முன்னோட்டம்
தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.
இந்த படத்தில், இந்திய கல்வி அமைப்பில் நடக்கும் அவலங்களை எதிர்க்கொள்ளும் ஆசிரியரை பற்றிய கதை தான் இது, என்பது படத்தின் ட்ரைலர் மூலம் யூகிக்க முடிகிறது.
தற்போது, படத்தின் பெயர், தங்கள் ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் விதமாக இருக்கிறது என்றும், அந்த பெயரை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும், தமிழக அரசிற்கு, புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த படம், இன்னும் இரண்டு தினங்களில் (பிப்ரவரி 17) அன்று திரைக்கு வரவிருக்கிறது.
இந்த நேரத்தில், இப்படியொரு சர்ச்சை எழுந்ததை அடுத்து, படக்குழுவும், தமிழக அரசும் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ட்விட்டர் அஞ்சல்
புதிய பிரச்சனையில் சிக்கிய 'வாத்தி'
ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் 'வாத்தி'... தனுஷ் படத்திற்கு புதிய சிக்கல் ! #dhanush #vaathihttps://t.co/pJpMPAG8gV
— TTN Cinema (@ttncinema) February 15, 2023