Page Loader
வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தாவை பாராட்டிய இயக்குனர் பாரதிராஜா
நடிகை சம்யுக்தாவை பாராட்டிய இயக்குனர் பாரதிராஜா

வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தாவை பாராட்டிய இயக்குனர் பாரதிராஜா

எழுதியவர் Venkatalakshmi V
Feb 15, 2023
02:12 pm

செய்தி முன்னோட்டம்

தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா, "நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் வயதில் சிறியவர்களாக போய்விட்டனர். இல்லையென்றால் அவர்கள் காலில் விழுந்துவிடுவேன்," என்று கூறினார். ஜி.வி.பிரகாஷ், கடவுளின் குழந்தை என்றும், தனுஷ் சிறந்த நடிகன் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து, பேசிய பாரதிராஜா,"கடலோர கவிதைகள் படத்தில் நான் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன். இப்போது சம்யுக்தாவை பார்க்கும் போது, காலம் தப்பி பிறந்து விட்டேனோ எனத்தோன்றுகிறது" எனக்கூறினார். இந்த படம், இன்னும் இரு தினங்களில், (பிப்., 17) அன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்திய கல்வி அமைப்பில் நடக்கும் அவலங்களை எதிர்க்கொள்ளும் பள்ளி வாத்தியாரை பற்றிய கதை என கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சம்யுக்தாவை பாராட்டிய இயக்குனர் பாரதிராஜா