Page Loader
அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிந்த 'லெஜெண்ட்' பட ஹீரோயின்
'லெஜண்ட்' படத்தில் ஊர்வசி ரவுத்தேலா

அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிந்த 'லெஜெண்ட்' பட ஹீரோயின்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 25, 2023
03:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில், 'லெஜெண்ட் சரவண ஸ்டோர்ஸ்' அதிபரான சரவண அருள் ஹீரோவாக அறிமுகமான 'லெஜெண்ட்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் ஊர்வசி ரவுத்தேலா. இவர் பாலிவுட் நடிகையாவார். அவர் சமீபத்தில், தெலுங்கு படம் ஒன்றில், ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். 'ஏஜென்ட்' என பெயரிடப்பட்ட அந்த படத்தின் ஹீரோ, பிரபல தெலுங்கு நடிகர் அகில் ஆவார். தற்போது, உமைர் சந்து என்ற ட்விட்டர் பயனர், திரைப்பட விமர்சகர் என தன்னை குறிப்பிட்டு கொண்டு, திரையுலக பிரபலங்களை பற்றி கிசுகிசு செய்திகளை பதிவிட்டு வருகிறார். அவர் சமீபத்தில், இந்த ஏஜென்ட் படப்பிடிப்பின்போது, அகில், ஊர்வசியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக பதிவிட்டார். அதை பார்த்த ஊர்வசி, தன்னை பற்றி அவதூறு பரப்பிய குற்றத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

அவதூறு பரப்பியவர் மீது வழக்கு தொடர்ந்த ஊர்வசி