வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' குறித்த அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர்அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட முக்கியமானோர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தினை தூண்டும் வகையில் இதுகுறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இப்படம் வெளியாகும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'Keep Calm and Avoid the Battle' என்னும் வாசகம் கொண்ட தெலுங்கு போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.