Page Loader
விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் காட்சியில் விபத்தா?
'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ரிஸ்க்கான ஸ்டண்ட் சீன் ஒன்றை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் காட்சியில் விபத்தா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 04, 2024
02:30 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. மகிழ் திருமேனி இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. படத்தின் முக்கிய காட்சிகள் அஸர்பைஜானில் படம்பிடிக்கப்பட்ட நிலையில், அங்கே நிலவிய கடும்குளிரினால், டிசம்பர் மாதம், படக்குழுவினர் தமிழ்நாடு திரும்பினார். படத்தை சார்ந்து வேறு எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையில் அஜித் பைக் ட்ரிப் சென்றுள்ளதாக அவரது PRO சுரேஷ் சந்திரா புகைப்படங்களை வெளியிட, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தநிலையில்,'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ரிஸ்க்கான ஸ்டண்ட் சீன் ஒன்றை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அதில் அஜித், டூப் போடாமல், தானே கார் ஒட்டி செல்வது போலவும், அந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது போலவும் உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

விடாமுயற்சி அப்டேட்