
மாமன்னனின் வெற்றி: மாரி செல்வராஜுக்கு காரை பரிசளித்தார் உதயநிதி ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
ஜூன்-29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய மாமன்னன் திரைப்படம், வணிக ரீதியாக பெரும் வெற்றியடைந்துள்ளது.
விமர்சன ரீதியாகவும் இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்த இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார்.
இந்நிலையில், 'மாமன்னன்' திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இப்படத்தின் படக்குழு நேற்று இதை கேக் வெட்டி கொண்டினர்.
இந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது, இந்த படத்தை தயாரித்த 'ரெட் ஜெயின்ட் மூவிஸ்' நிறுவனம், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஒரு மினி கூப்பர் காரை பரிசளித்தது.
இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை,… pic.twitter.com/ro4j7epjAI
— Udhay (@Udhaystalin) July 2, 2023