Page Loader
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் படத்தில் த்ரிஷா 
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் படத்தில் த்ரிஷா

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் படத்தில் த்ரிஷா 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 29, 2023
05:06 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை த்ரிஷா தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு பிறகு அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் வரிசையாக நடித்து வருகிறார். இந்த சூழலில், தற்போது ஹிந்தி படம் ஒன்றில் அவர் இணைந்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான் நடிக்கும் படத்தில் நாயகியாக அவர் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்கவிருப்பது பிரபல கோலிவுட் இயக்குனர் விஷ்ணுவர்தன். இது த்ரிஷாவின் இரண்டாவது நேரடி ஹிந்தி படமாகும். இந்த திரைப்படத்தின் பெயர் 'தி புல்' என கூறப்படுகிறது. பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

சல்மான்கான் படத்தில் இணையும் திரிஷா