கங்குவா படத்தின் நீளம் குறைப்பு; இரைச்சல் மிகுந்த ஆடியோவும் சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல்
அதிக எதிர்பார்ப்புடன் நடிகர் சூர்யா நடிப்பில் அதிகார எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் ஆரம்ப காட்சிகளின் நீளமும், எரிச்சலூட்டும் அதிக ஒலியும் படத்தின் மிகப்பெரிய விமர்சனமாக வைக்கப்பட்டது. இந்த கருத்தை பலரும் ஒரு சேர தெரிவித்த நிலையில் தற்போது ட்ரிம் செய்யப்பட்ட, சத்தமாக ஒலித்த ஆடியோ சரி செய்யப்பட்டு, மறு தணிக்கை செய்யப்பட்டு மீண்டும் வெளியாகியுள்ளது. கங்குவா படத்தின் தயாரிப்பாளர்கள் எதிர்மறையான கருத்துக்களைப் பெற்ற பிறகு படத்தின் கிட்டத்தட்ட 12 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்துள்ளனர். முன்னதாக ஸ்டுடியோ கிரீனின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா, தெலுங்கு ஊடகங்களுடன் ஒரு உரையாடலில், ஆடியோ சிக்கல்களை ஒப்புக்கொண்டு, ஒலியளவை இரண்டு புள்ளிகள் குறைப்பதாக உறுதியளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Twitter Post
கங்குவா படத்திற்கு தன்னுடைய சப்போர்ட்-ஐ வெளிப்படுத்திய ஜோதிகா
மறு தணிக்கை செய்யப்பட்ட கங்குவா திரைப்படம் இன்று (நவம்பர் 19) அல்லது நாளை (நவம்பர் 20) முதல் திரையரங்குகளில் ஓடத் தொடங்கும். முன்னதாக நவம்பர் 17 அன்று, ஜோதிகா கங்குவாவிற்கு தன்னுடைய சப்போர்ட்-ஐ வெளிப்படுத்தி ஒரு பதிவை இட்டார். அதில், "நிச்சயமாக முதல் 1/2 மணிநேரம் வேலை செய்யாது, ஒலி சலசலக்கிறது! பெரும்பாலான இந்தியப் படங்களில் குறைபாடுகள் ஒரு பகுதியாகும், எனவே இது மிகவும் நியாயமானது, குறிப்பாக இதுபோன்ற ஒரு படத்தில் ஒருவர் பெரும்பாலும் பரிசோதனை செய்கிறார்!" என்றார். பின்னர் அவர் கங்குவா படத்திற்கு எழுந்துள்ள எதிர்மறையான விமர்சனங்களைப் பார்த்து தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார். படத்திற்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.