Page Loader
பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் ட்ரைலர் வெளியானது

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் ட்ரைலர் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
May 09, 2023
05:27 pm

செய்தி முன்னோட்டம்

'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவானவர் பிரபாஸ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'. சென்ற ஆண்டு வெளியான இந்த படத்தின் டீஸர் எதிர்மறை விமர்சனங்களை ஈர்த்தது. படத்தின் VFX கேள்விக்குரியதாக ஆன நிலையில், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு, படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் மீண்டும் துவங்கியது. கடந்த ராமநவமி அன்று படத்தின் போஸ்டர் வெளியான நிலையில், இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. ராமாயண இதிகாசத்தை திரைக்காவியமாக மற்றும் முயற்சியில், படத்தின் இயக்குனர் ஓம் ராவத் இறங்கியுள்ளார். இந்த படத்தில், ராமனாக பிரபாஸும், சீதாவாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும், ராவணனாக சைப் அலிகானும் நடிக்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

படத்தின் ட்ரைலரை குறித்து இயக்குனரின் பதிவு