பிரபலங்கள் துக்க நிகழ்வுகளில் வீடியோவுக்கு அனுமதி மறுப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு
நேற்று முன் தினம், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் இறந்த செய்தி கேட்டு, பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு வருகை தந்தனர். இதனை படம்பிடிக்கவும், TRP எகிற வைக்கும் நோக்கோடும் பல டிவி சேனல்கள் போட்டிபோட்டு கொண்டு கேமராவை தூக்கி திரிந்தன. பலர், அக்கம்பக்கம் இருந்த மொட்டைமாடி, இண்டுஇடுக்கு என பல இடங்களில் கேமராவை பொருத்தி படம் பிடித்தனர். இந்த செயல் மனிதாபிமானமற்றது என பலராலும் கண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது, தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பிரபலங்கள்/ சினிமா துறையினரின் துக்க நிகழ்வுகளில் இனி வீடியோ அனுமதி மறுப்பு அல்லது காவல்துறை அனுமதி பெற்ற பிறகே வீடியோ எடுக்க அனுமதிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.