Loading...
சென்னையில் களைகட்டிய அரசியல்-சினிமா நட்சத்திரங்களின் சங்கமம்: ஒரே பிரேமில் முதல்வர் விஜய், ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் கவுதம் அதானி
ஒரே பிரேமில் முதல்வர் விஜய், ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் கவுதம் அதானி

சென்னையில் களைகட்டிய அரசியல்-சினிமா நட்சத்திரங்களின் சங்கமம்: ஒரே பிரேமில் முதல்வர் விஜய், ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் கவுதம் அதானி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2026
08:19 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும், ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினருமான ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகளின் திருமண வரவேற்பு விழா, தென்னிந்திய அரசியலிலும் சினிமா துறையிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த நட்சத்திர அந்தஸ்து வாய்ந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், நடிகை த்ரிஷா, மற்றும் பல்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னணித் தொழிலதிபர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சந்திப்பு

வைரலாகும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் சந்திப்பு

தமிழக முதல்வர் விஜய், தனது தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து திருமண வரவேற்பு விழாவிற்கு வந்திருந்தார்.

கருப்பு சூட்டில் முதல்வர் விஜய்யும், பிங்க் நிறச் சேலையில் த்ரிஷாவும் விழாவிற்கு வந்திருந்தனர்.

இருவரும் சந்தித்து நல்வாழ்த்துகளைத் தெரிவித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.

வைரல்

ஒரே மேடையில் விஐபிக்கள்

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது மனைவியார் ஒய்.எஸ். பாரதி, BRS கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் மற்றும் அவரது மனைவி ஷைலிமா, மற்றும் நாட்டின் முன்னணித் தொழிலதிபரான கவுதம் அதானி உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

முதல்வர் விஜய், ஜெகன் மோகன் ரெட்டி, கே.டி.ஆர் மற்றும் கவுதம் அதானி ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்து உரையாடிய புகைப்படங்கள் மற்றும் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட தருணங்கள் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.

இருவரும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் ஒரே இடத்தில் கலந்துகொண்ட இந்தத் திருமண விழா தற்போது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் முக்கியச் செய்தியாக வலம் வருகிறது.

ADVERTISEMENT