தமிழ் சினிமாவுக்கு முதல்வர் விஜய் தீபாவளி பரிசு: 224 படங்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்
செய்தி முன்னோட்டம்
தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ் திரையுலகிற்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 224 தமிழ் திரைப்படங்களுக்கான அரசு மானியத் தொகையான ₹15.68 கோடியை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக விடுவித்து உத்தரவிட்டுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தகுதிபெற்ற 224 படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தலா ₹7 லட்சத்திற்கான காசோலைகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆறுமுகம் நேரில் வழங்கி கௌரவித்தார்.
தயாரிப்பாளர் டி. சிவா பாராட்டு
7 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு
சமூக விழிப்புணர்வு மற்றும் சிறந்த கருத்துகளை கொண்ட குறைந்த பட்ஜெட் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியம், 2015 முதல் 2022 வரையிலான 224 படங்களுக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், சுமார் ₹16 கோடி மானியத் தொகையை விடுவித்த முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ராஜ்மோகனுக்கு அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி. சிவா நன்றி தெரிவித்துள்ளார்.
"இது வெறும் மானியம் அல்ல; படம் எடுத்து வாழ்வாதாரத்தை இழந்த 90 சதவீத எளிய தயாரிப்பாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ள உண்மையான தீபாவளிப் பரிசு" என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சான்றிதழ் குழு தேர்வு
அமைச்சரின் உறுதிமொழி
ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, ஆண்டிற்கு 28 படங்கள் வீதம் மொத்தம் 224 திரைப்படங்களை அரசு மானியத்திற்குத் தேர்வு செய்தனர்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "பெண் சிசுக்கொலைக்கு எதிராக பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா போன்று சமூக மாற்றத்தை விதைத்த திரைப்படங்களின் அவசியத்தை நாம் உணர வேண்டும்."
"வணிக ரீதியான லாபத்தை மட்டும் நோக்காமல் சமூகப் பொறுப்புடன் படம் எடுக்கும் சிறிய தயாரிப்பாளர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்."
இனிவரும் காலங்களில் திரைப்பட மானியங்கள், மாநில விருதுகள் மற்றும் கலைமாமணி விருதுகள் அனைத்தும் பாரபட்சமின்றி முழுத் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வெளிப்படையாக வழங்கப்படும்" என்று உறுதியளித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 224 திரைப்படங்களுக்கான மானியத் தொகையான சுமார் ₹16 கோடியை உடனடியாக விடுவித்து, 224 தயாரிப்பாளர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், இதற்காக முழு முயற்சியுடன்… pic.twitter.com/m9AtlsdxHT
— T Siva (@TSivaAmma) October 31, 2026