பஃபே உணவை முழுவதுமாக குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க சில குறிப்புகள்
பஃபேக்களில் வைக்கப்படும் பலவிதமான உணவுகள் நிச்சயமாக நம் கண்களையும், சுவை மொட்டுகளையும் ஈர்க்கும். அதே வேளையில், அது நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். பஃபேவை முழுவதுமாக, குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க, சில டிப்ஸ் இதோ: ஒவ்வொரு உணவையும் கண்காணிக்க வேண்டியதில்லை. அது உங்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சுவைக்காக, அனைத்து உணவுகளிலும் சிறிதளவு உண்ணலாம். தவறில்லை. உங்கள் மனதிற்கு பிடிக்காத உணவை, சுவைத்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை. தேவை இல்லாத உணவை ஒதுக்கி விடலாம். உங்கள் செரிமானத்தை மெதுவாக்கவும், உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும், புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் தேர்ந்தெடுக்கவும். உணவை மெதுவாக சுவைத்து உண்ணவும். சாப்பிடும் போது, பசிக்கு ஏற்றவாறு உணவின் அளவை தேர்வு செய்யவும்.