NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தமிழில் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் படங்கள், சீரிஸுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழில் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் படங்கள், சீரிஸுகள்
    நடிகை திரிஷா பத்திரிகையாளராக நடித்துள்ள ' தீ ரோடு' திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது.

    தமிழில் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் படங்கள், சீரிஸுகள்

    எழுதியவர் Srinath r
    Oct 04, 2023
    05:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வாரம் தமிழ் சினிமாவில், 7 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அந்த திரைப்படங்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்.

    800- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம். முதலில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பதாக இருந்தது. பின்னர் கிளம்பிய சர்ச்சையால் அவர் வெளியேறினார். மாதூர் மிட்டல் முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார்.

    ரத்தம்- நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். பெயருக்குதகுந்தார் போல் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக படம் உருவாகி உள்ளது.

    2nd card

    இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்-2

    ஷாட் பூட் த்ரீ- நடிகர்கள் யோகி பாபு, வெங்கட் பிரபு, பூவையார் - கப்பீஸ், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தில் நாய் தான் ஹீரோ. நண்பர்களான நான்கு குழந்தைகளின் வாழ்க்கையில் இணையும் ஒரு நாய் திடீரென தொலைந்து விடுகிறது அதை கண்டுபிடிப்பது தான் மீதி கதை.

    இறுகப்பற்று- ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ள இத்திரைப்படம் உறவுகளில் உள்ள சிக்கல்களையும், அர்த்தமான வாழ்விற்கு உறவுகளிடம் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்வது குறித்தும் பேசுகிறது. நடிகர்கள் விக்ரம் பிரபு, விதார்த் நாயகிகளாக அபர்ணாதி, சிரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளனர்.

    எனக்கு எண்டே கிடையாது- விக்ரம் எம் ரமேஷ் நடித்து இயக்கியுள்ள இத்திரைப்படம் பேராசையால் சிக்கலில் சிக்கும் கார் டிரைவரின் கதை. ஸ்வயம் சித்தா, கார்த்திக் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    3rd card

    இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்- 3

    தி ரோடு- எப்படி ஒரு தேசிய நெடுஞ்சாலை, படத்தில் நடித்துள்ள நடிகர்கள் வாழ்க்கையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தில் பத்திரிகையாளராக த்ரிஷா நடித்துள்ளார். நடிகர்கள் ஷபீர் கல்லரக்கல், சந்தோஷ் பிரதாப், எம் எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

    தில் இருந்தா போராடு- படித்த ஆனால் பொறுப்பில்லாமல் இருக்கும் இளைஞன் பொறுப்பாய் மாறுவதுதான் இத்திரைப்படத்தின் கதை. எஸ் கே முரளிதரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கார்த்திக் தாஸ், வனிதா விஜயகுமார், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், மறைந்த இயக்குனர் மனோ பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    4rd card

    இந்த வாரத்தின் ஓடிடி ரிலீஸ்

    மார்வெல் சீரிஸ் லோகி சீசன் 2- மார்வெல் ஸ்டுடியோஸ்-இன், லோகி சீசன் 2 டிஸ்னி +ஹாட்ஸ்டாரில் வரும் ஆறாம் தேதி அன்று, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. மார்வெல் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியஸின் முதல் பாகம் ஏற்கனவே டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சினிமா
    திரைப்பட வெளியீடு
    தமிழ் திரைப்படம்
    தமிழ் திரைப்படங்கள்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    சினிமா

    பாலியல் கொடுமை, மன உளைச்சல்.. ஃபீனீக்ஸ் பறவையாக மீண்டு வந்த நடிகை பாவனா!  தென் இந்தியா
    "எந்தன் கண் முன்னே" தனது குரலால் மக்களின் மனம் கவர்ந்த பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்!  பிறந்தநாள்
    இராவணன் வேடத்திற்கு நோ சொன்ன 'ராக்கி பாய்' யாஷ் திரைப்படம்
    பாலிவுட் நடிகருடன் காதலை உறுதி செய்தார் நடிகை தமன்னா கோலிவுட்

    திரைப்பட வெளியீடு

    சாந்தனு நடிக்கும் 'ராவண கோட்டம்' திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிக்கை! கோலிவுட்
    தடைகளை மீறி 37 நாடுகளில் வெளியாகப்போகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட அறிவிப்பு
    'ராவண கோட்டம்' திரைப்பட எதிர்ப்புக்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் தரப்பு  திரைப்பட அறிவிப்பு
    தீபாவளிக்கு வெளியாக போகிறது ஜிகர்தண்டா டபுள் X கார்த்திக் சுப்புராஜ்

    தமிழ் திரைப்படம்

    ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் - பகுதி 2  தமிழ் படத்தின் டீசர்
    அடுத்த ரௌண்டுக்கு ரெடி ஆகும் திரிஷா; D50 படத்தில் இணையப்போவதாக தகவல்  தமிழ் திரைப்படங்கள்
    "காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன் " நடிகை பாவனாவின் பிறந்த நாள்!  கோலிவுட்
    அடடே... இயக்குனர் சுசீந்திரன் வில்லனா நடிக்கப்போறாரா...? இயக்குனர்

    தமிழ் திரைப்படங்கள்

    மறுபடியும் 20 வருடம் கழித்து விஜய்க்கு ஜோடியாகும் ஜோதிகா  நடிகர் விஜய்
    பர்த்டே ஸ்பெஷல்: யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை அஞ்சலியின் டாப் 5 படங்கள் பிறந்தநாள்
    நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியான சில சுவாரசிய படங்கள்  பிறந்தநாள்
    நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரர் மற்றும் சகோதரி ஒரே நாளில் மரணம்  இயக்குனர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025