தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி தேர்வு
கோலிவுட்டில் மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல், நேற்று நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் இந்த தேர்தலுக்கு, அதிகாரியாக நியமிக்கப்பட்டனர். திரையுலகினர் பலரும், இந்த தேர்தலில் வாக்களித்த நிலையில், தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி, தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சங்க தலைவர் மட்டுமின்றி, இரண்டு துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்கனவே சென்ற முறையும் முரளி தான் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிரணியில், மன்னன் வேட்பாளராக நின்றார். அவர் அணியில், அர்ச்சனா கல்பாத்தி, 'கலைப்புலி' தாணு ஆகியோர் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.