Loading...
நானியின் 'தி பாரடைஸ்' மற்றும் கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நானியின் 'தி பாரடைஸ்' மற்றும் கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 19, 2026
08:41 am

செய்தி முன்னோட்டம்

சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், திருநர் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'டோரதி' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா இசையில், சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி நெட்ஃபிளிக்சில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

தி பாரடைஸ்

நானியின் 'தி பாரடைஸ்' நெட்ஃபிளிக்சில் வெளியீடு

ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இப்படத்தில் மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்ஃபிளிக்சில் வெளியாகிறது.

ஒரே வாரத்தில் இரண்டு பெரிய படங்கள் ஓடிடியில் வெளியாக இருப்பது சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையரங்குகளில் கலவையான மற்றும் நேர்மறையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படங்கள் டிஜிட்டல் தளத்தில் எத்தகைய வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT