
சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்?
செய்தி முன்னோட்டம்
நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிதிமோருவின் அண்மைய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, இருவரும் காதல் உறவில் இருப்பதாக வதந்திகள் பரவியுள்ளன.
இந்த வதந்திகள் வேகமெடுக்கும் வேளையில், மக்கள் கவனம் தற்போது ராஜ் நிதிமோருவின் மனைவி ஷ்யாமாலி டேவின் மீது திரும்பியுள்ளது.
ஆம், இயக்குனர்- தயாரிப்பாளர் ராஜ் நிதிமோரு ஏற்கனவே திருமணம் ஆனவர்.
சமந்தாவின் இன்ஸ்டா பதிவை தொடர்ந்து அவரது மனைவி ஷ்யாமலி பதிவிட்ட பதிவே அவரின் மீது கவனத்தை திருப்பியுள்ளது.
விவரங்கள்
ஷ்யாமலி தே யார்?
2015-ஆம் ஆண்டு ராஜ் நிதிமோருவை திருமணம் செய்த ஷ்யாமலி, திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க அனுபவம் கொண்டவர்.
உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கிய இவர், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மற்றும் விஷால் பாரத்வாஜ் போன்ற பிரபல பாலிவுட் இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார்.
பல்வேறு புகழ்பெற்ற திரைப்படங்களில் (ரங் தே பசந்தி, ஓம்காரா, ஏக் நோதிர் கோல்போ) படைப்பாற்றல் ஆலோசகராகவும் செயல்பட்டிருக்கிறார்.
உளவியல் பட்டம் பெற்றவர் என்பதால், சினிமாவுக்குள் புதிய பார்வையுடன் நுழைந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இன்ஸ்டா பதிவு
வதந்திகளுக்கு இடையே சிந்திக்க வைத்த ஷ்யாமலியின் இன்ஸ்டா பதிவு
சமந்தா மற்றும் ராஜ் தொடர்பான வதந்திகள் சூடுபிடித்துள்ள சூழலில், ஷ்யாமலி டே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சமீபத்திய பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
நேரடியாக யாரையும் குறிப்பிடாத இந்தப் பதிவு, சமந்தா மற்றும் ராஜ் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியாகிய நாளையே பதிவாகியிருந்தது.
அவர் எழுதியிருந்தது:"என்னைப் பற்றி நினைக்கும், என்னைப் பார்க்கும், என்னைக் கேட்கும், என்னுடன் பேசும், என்னைப் பற்றிப் பேசும் அனைவருக்கும் ஆசீர்வாதங்களையும் அன்பையும் அனுப்புகிறேன்."
உறவு
சமந்தா- ராஜ் உறவு உறுதி ஆகுமா?
சமந்தா-ராஜ் இணைபபடம் ரசிகர்களிடையே உறவை உறுதிப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.
சமீபத்திய வெளிநாட்டு பயணங்களும், சமூக ஊடக பதிவுகளும், வதந்திகளுக்கு வலு சேர்த்துள்ளன.
இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் அளிக்காத நிலையில், இணையவாசிகள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் இந்த வதந்தி பெரும் விவாத பொருளாகி வருகிறது.