
ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு
செய்தி முன்னோட்டம்
நடிகை சமந்தா சமூக ஊடகங்களில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் ராஜ் நிதிமோருவின் தோள்களில் தலை சாய்ந்து அமர்ந்திருப்பதைக் காணமுடிந்தது.
இதன் மூலம், சமந்தா தனது காதலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
புதன்கிழமை நடிகை சமந்தா தனது முதல் தயாரிப்பான 'சுபம்' வெளியீட்டைக் கொண்டாடும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் தனது 'காதலர்' என வதந்திகளால் கூறப்படும் இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் (ராஜ் மற்றும் டிகே இயக்குனர்கள் இணை) போஸ் கொடுப்பதைக் காணக்கூடிய பல புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் குறிப்பாக ஒரு புகைப்படத்தில், அவர் ஒரு விமானத்தில் ராஜின் தோள்களில் தலை சாய்ந்து அமர்ந்திருப்பது காண முடிகிறது.
வதந்தி
சமந்தா, இயக்குனர் ராஜ்-ஐ காதலிப்பதாக சில மாதங்களாக வதந்தி பரவி வருகிறது
சமந்தாவும், ராஜ் என்பவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வருவதாக வதந்தி பரவி வருகிறது.
கடந்த மாதம் இருவரும் திருப்பதி கோயிலுக்கு ஒன்றாகச் சென்று தரிசனம் செய்ததால், அவர்களது காதல் குறித்து ரசிகர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டனர்.
தற்போது சமந்தாவின் இன்ஸ்டா பதிவு ரசிகர்களிடமிருந்து பல கருத்துகளைப் பெற்றது.
எனினும் இது வரை, சமந்தாவோ அல்லது ராஜோ தங்கள் காதல் பற்றிய வதந்திகளை உறுதிப்படுத்தவில்லை.
அவர்கள் இணைந்து பணியாற்றும் அடுத்த படம் நெட்ஃபிளிக்ஸில் 'ரக்த் பிரம்மந்த்: தி ப்ளடி கிங்டம்'. இதில் புஷ்கல் பூரி, வாமிகா கபி மற்றும் அலி ஃபசல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Huge congratulations to Samantha on the success of #Subham !!!!! ♥️♥️
— Chennai Samantha Fans (@Chennai_SamFans) May 14, 2025
Your success is well-deserved. You deserve all the love and happiness in the world 🫶🏻@Samanthaprabhu2 • #Samantha • #SamanthaRuthPrabhu pic.twitter.com/ABlEhXukuT