Page Loader
'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் 
125 நாட்கள் தொடர்ந்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் 

எழுதியவர் Sindhuja SM
Aug 19, 2023
04:53 pm

செய்தி முன்னோட்டம்

'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 5ம் தேதி மலேசியாவில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 125 நாட்கள் தொடர்ந்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் 'லியோ' திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே, இப்படத்தின் 'நா ரெடி தான்' என்ற பாடல் வெளியிடப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதனால், இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்ற கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்து வந்தனர். இந்நிலையில், 'லியோ' படத்தின் பாடல் வெளியீட்டு விழா அக்டோபர் 5ம் தேதி நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

மலேசியாவில் நடக்கிறதா 'லியோ' படத்தின் பாடல் வெளியீட்டு விழா?