Page Loader
சிறந்த திரைப்படத்திற்கான தாதாசாகேப் பால்கே விருதை வென்ற 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம்
சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம்

சிறந்த திரைப்படத்திற்கான தாதாசாகேப் பால்கே விருதை வென்ற 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 21, 2023
02:35 pm

செய்தி முன்னோட்டம்

சென்ற ஆண்டு, விவேக் அக்னிஹோத்ரியின் இயக்கத்தில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்கிற ஹிந்தி திரைப்படம் தாதாசாகேப் பால்கே விருதுகள் 2023 இல் சிறந்த திரைப்பட விருதை வென்றுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர், வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இந்தியா மக்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். அவரின் ட்விட்டர் பதிவுக்கு, சக திரைப்பட பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம், 1990 இல் காஷ்மீரில் நடந்த வன்முறையை பற்றிய படம். நாடு காஷ்மீரி பண்டிட் சமூகத்தின் வலி, துன்பம் மற்றும் போராட்டத்தை பற்றிய கதையாகும். இதில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

தாதாசாகேப் பால்கே விருதை வென்ற 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'