இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது பாடகி பவதாரிணியின் உடல்
செய்தி முன்னோட்டம்
இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடல் தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இலங்கையில் புற்றுநோய்க்கு அவர் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை காலமானார்.
யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து பவதாரிணியின் உடலை இளையராஜாவின் வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
இதற்கிடையில், சென்னை தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்திற்கு நடிகர்கள் மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
மேலும், பாடகி பவதாரிணியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சென்னைக்கு கொண்டு வரப்பட்டது பாடகி பவதாரிணியின் உடல்
Watch | தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது பாடகி பவதாரிணியின் உடல்!
— Sun News (@sunnewstamil) January 26, 2024
இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை காலமானார்.#SunNews | #Bhavatharini pic.twitter.com/8o0RY6BMXt