
வெளியானது தங்கலான்; படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி?
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) திரைக்கு வந்துள்ளது.
படத்தில் விக்ரமுடன் பிரவதி திருவோது, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
1800களில் உள்ளூர் நிலச்சுவான்தார்களிடம் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த தங்கலான் குடும்பத்தினருக்கு பிரிட்டிஷிடம் இருந்து கோலார் தங்க வயலில் தங்கத்தைத் தேடும் பணிக்கு வாய்ப்பு வருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கலான் குடும்பம் முன்னேற நினைக்க, அதற்கு பிரிட்டிஷார் உதவினார்களா? தங்கம் கிடைத்ததா? என்பதை அடிப்படையாக வைத்து கதை நகர்கிறது.
இந்நிலையில், படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
ரசிகர்கள் கருத்து
தங்கலான் தமிழ் படம் இல்ல... International படம்🥵. தமிழ் சினிமாவுக்கு இது ஒரு புது attempt. சியான் ரத்தமும், சதையுமா நடிச்சுருக்காப்ள... ரஞ்சித் supernatural, horror elements லாம் நல்லா பண்ணிருக்காரு... இந்த படத்துக்கு இந்த pacing சரியானது தான்.. #Thangalaan - வென்றான். @chiyaan pic.twitter.com/rs3hZH5t3g
— Arul Bharathi 💙 (@arulbharathi05) August 15, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#தங்கலான் கற்பனை கதையின் நிஜ வரலாறு..ஆடை நிலம் கடவுள் உணவு இயலாமை அரசியல் 🔥 @chiyaan விருதுகள் விரும்பி வரும் @beemji உங்களுக்கு கண்டிப்பாக விருதுகள் கிடைக்க வேண்டும் @parvatweets பயங்கரம் @MalavikaM_ ஏற்புடைய பாத்திரம் @gvprakash 💯@kishorkumardop 💯#Thangalaan World Class pic.twitter.com/mLXQv2fSHn
— Nagaprabhu (@Nagaprabhu1596) August 15, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Thangalaan #தங்கலான் #ThangalaanReview @chiyaan sir 🙏 படம் பாத்துட்டேன். Really Very Fantastic ❤. Love you sir..
— TubeLight ❣️ (@Blink_Blng) August 15, 2024
My Rating : 9.5/10 😘
படம் எதிர்பார்த்தத விட சிறப்பா இருந்துச்சு.. #KGF ன் உண்மை வரலாறை நிறைய பேர் அறிந்துகொள்ள ஒரு படைப்பாவே கொடுத்துருக்கீங்க @beemji sir. pic.twitter.com/mq34CqAKML
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தங்கலான் ரிவ்யூ 4.5/5
— Nanban (@YourNanban) August 15, 2024
தங்கலான் வெற்றிக்கு தோழர் @beemji ரஞ்சித்திற்கு வாழ்த்துக்கள். மொத்தமாக திருப்தியை இந்த படம் கொடுக்கிறது.
தங்கத்தை தேடி ஆங்கிலேயர் ஒருவர் வருகிறார், மிராசிடம் பண்ணை அடிமைகளாக இருக்கும் தன் மக்களை விடுவிக்க ஆங்கிலேயருக்கு உதவ மண்ணின் மைந்தன் தங்களான்… pic.twitter.com/Rd4y8YAoZ1