
#தலைவர்171: ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை
செய்தி முன்னோட்டம்
ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தை முடித்துவிட்டு T.J.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.
'லியோ' திரைப்படம் வெளியாகும் முன்பே இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, ரஜினிகாந்திற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பேசிவருவதாக ஊடகத்தில் கூறப்படுகிறது.
ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில், சந்தனம் கதாபாத்திரத்திற்கு முதலில் ராகவா லாரன்ஸிடம் கேட்கப்பட்டதாகவும், அப்போது அவர் நடிக்க முடியாமல் போனதாலையே விஜய் சேதுபதி நடித்ததாகவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ரஜினிக்கு வில்லன் ராகவா லாரன்ஸ்?
#Thalaivar171 - #RaghavaLawrence likely to do antagonist role in the movie😳🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) November 3, 2023
Already #LokeshKanagaraj approached Lawrence to do Santhanam character in Vikram, but he was unable to do at that time🤞
Lawrence is Superstar #Rajinikanth's Ardent fan boy & he mentioned in many…