இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெயரில் மோசடி: பிரபல தெலுங்கு நடிகர் குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டின் டாப் இயக்குனரின் ஒருவரான லோகேஷ் கனகராஜின் பெயரை கொண்டு மர்ம நபர் ஒருவர் மோசடி செய்து வருவதாக, பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில், காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் பிரம்மாஜி.
இவர் தமிழிலும், சரவணா, சென்னை காதல், கவுரவம், சாகசம், தி வாரியர் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர், அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒரு தொலைபேசி நம்பரை பதிவிட்டு, அந்த நம்பரில் பேசும் நபர் ஒரு மோசடி ஆள் என பதிவிட்டார்.
card 2
பிரம்மாஜியின் அதிர்ச்சி பதிவு
பிரம்மாஜி மேலும், "இந்த மோசடி நபர் தன்னை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மானேஜர் நடராஜ் அண்ணாதுரை என்றுக்கூறி, பலரிடம் பேசி வருகிறார். 'லோகேஷ் இயக்கும் அடுத்த படத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். ஆடிஷனுக்கான காஷ்ட்யூமுக்கு நீங்கள் வாடகை செலுத்த வேண்டும். ஆடிஷன் முடிந்ததும் அந்தத் தொகை திருப்பிச் வழங்கப்படும்' என்று கூறி வருகிறார். இது வளர்ந்து வரும் கலைஞர்களை குறிவைத்து நடக்கும் ஒரு புதிய வகை பண மோசடி. அதனால் அந்த நபரிடம் எச்சரிக்கையாக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும்,"தமிழ்நாட்டிருந்து இன்னொருவரான சத்யதேவ் என்பவரும், நடிப்பு ஆசையில் இருப்பவர்களிடம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். எச்சரிகையாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மோசடி நபர், தன்னை பிரபல பத்திரிகையாளர் போல காட்டிக்கொள்வார் எனக்குறிப்பிட்டிருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
பிரம்மாஜியின் அதிர்ச்சி பதிவு
Satyadev poses as @ForbesIndia journalist n cheat ..
— Brahmaji (@actorbrahmaji) October 5, 2023