Page Loader
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'அரியவன்' டீஸர் வெளியீடு
'அரியவன்' திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'அரியவன்' டீஸர் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2023
03:13 pm

செய்தி முன்னோட்டம்

தனுஷுடன் 'திருச்சிற்றம்பலம்' என்ற வெற்றி படத்தை தந்த பிறகு, இயக்குநர் மித்ரன் கே ஜவஹர் இயக்கும் புதிய படம், 'அரியவன்'. அறிமுக நடிகர் இஷான் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த வாரம் வெளியானது. இஷான், பிரனாலி கோகரே, டேனியல் பாலாஜி, சத்யன், ரவி வெங்கடராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு மூவர் இசையமைக்கின்றனர். ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர் மற்றும் கிரி நந்த் ஆகியோர். 'அரியவன்' திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்றும், மாரிச்செல்வன் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு இயக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்த கோடையில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

'அரியவன்' திரைப்படத்தின் டீஸர்