
தமிழில் இந்த வார ஓடிடி மற்றும் திரையரங்கு வெளியீடுகள்
செய்தி முன்னோட்டம்
தமிழில் கடந்த வாரம் 7 படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த வாரம் 2 படங்கள், திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
புதுவேதம்- இமான் அண்ணாச்சி, சிசர் மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படத்தை ராசா விக்ரம் இயக்கியுள்ளார். மறுமணம் முடிக்கும் கைம்பெண்ணால் கைவிடப்பட்டு ஆதரவற்று வளரும் அவன், பின்னாலில் காதலிக்கும் பெண் வேறொருவரால் கர்ப்பமானால் என்ன நடக்கும் என்பது படத்தின் கதை.
குண்டான் சட்டி- கும்பகோணம் கருப்பூர் கிராமத்தில் குப்பனும், சுப்பனும் நண்பர்களாக உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் மணமுடிகிறார்கள். அவர்களுக்கு குண்டேஸ்வரன், சத்தீஸ்வரன் என ஒரே நேரத்தில் குழந்தைகளும் பிறக்கின்றன. காலமாற்றத்தில் இவர்களது நட்பு எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதே படத்தின் கதை. படத்தை அகஸ்தி இயக்கியுள்ளார்.
2nd card
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
தமிழில் ஓடிடியில், இந்த வாரம் 3 திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் வெளியாகின்றன.
மார்க் ஆண்டனி- விஷால், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள இந்த சயின்ஸ் பிரிக்ஷன் திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று இருந்த இத்திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.
மத்தகம் பார்ட் 2- அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், வடிவுக்கரசி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள மத்தகம் சீரிஸின் இரண்டாம் பாகம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியாகிறது.
மத்தகம் முதல் பாகம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
3rd card
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
தி கிரேட் இந்தியன் சூசைட்- திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த சீரிசை மாதேஷ் இயக்கி உள்ளார். குரு சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாளா நடித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள குருசோமசுந்தரம், தன் தங்கையின் தற்கொலையை கொலை என நம்புகிறார். அதை அவர் நிரூபிப்பது தான் இந்த சீரிஸின் கதை. ஆஹா ஓடிடியில் அக்டோபர் 13 ஆம் தேதி தி கிரேட் இந்தியன் சூசைட் வெளியாகிறது.
ட்விட்டர் அஞ்சல்
மத்தகம் பார்ட் 2 அக்டோபர் 12 ஆம் தேதி வெளியாகிறது
Yes, we can't wait💥🐘#Mathagam2 - Streaming from October 12th on #DisneyPlusHotstar #Mathagam2OnHotstar #TheNightisLong pic.twitter.com/khteMBvzYS
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 6, 2023
ட்விட்டர் அஞ்சல்
தி கிரேட் இந்தியன் சூசைடில் குருசோமசுந்தரம் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்
The Great Indian Suicide - Based on true events premieres on aha this Oct 13th!
— aha Tamil (@ahatamil) October 10, 2023
Stay tuned 👁#TheGreatIndianSuicideOnAHA pic.twitter.com/CyGbo6yTeU