இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
இந்த வாரம் திரையரங்குகளில் கிட்டத்தட்ட 4 புது படங்கள் வெளியாகும் நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் படங்கள் என்னென்ன எனப்பார்ப்போமா?
சாகுந்தலம்: சமந்தா ரூத் பிரபு நடிப்பில், அதிக பொருட்செலவில் பான் இந்தியா படமாக வெளியான சாகுந்தலம், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதிகாச கதையாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், சமந்தா, சகுந்தலா கதாபாத்திரத்திற்காக மிகவும் மெனக்கெட்டதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் படம் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டவில்லை. இதற்காக சமந்தா தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்ததாகவும் பேச்சு. இந்த திரைப்படம், வரும் 12 ஆம் தேதி, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
card 2
OTT தளத்தில் வெளியாகும் மேலும் சில படங்கள்
ருத்ரன்: ராகவா லாரன்ஸ், பிரியா பவானிஷங்கர் ஆகியோர் நடித்த ருத்ரன் திரைப்படம் சென்ற மாதம் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்தார் சரத்குமார். இந்த படம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சொப்பன சுந்தரி: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் மே 12-ஆம் தேதி வெளியாகிறது இந்த திரைப்படம். இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
திருவின் குரல்: அருள்நிதி, பாரதிராஜா இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம், பெரிதும் எதிர்பார்க்கபட்ட நிலையில், கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தந்தை-மகனுக்கு இடையேயான பாசத்தை பிரதிபலிக்கும் கதையாக இந்த திரைப்படம் இருக்கிறது என விமர்சனங்கள் வந்தது. இந்த திரைப்படமும், மே 12 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.