நட்பை பாராட்டும் தமிழ் திரைப்படங்கள் பகுதி 2
ஒவ்வொரு மனிதனுக்கும், அவனது சுக-துக்கங்களை எந்த ஒரு தடையும் இன்றி பகிர்ந்து கொள்ள ஒரு உறவு கிடைத்து விட்டால், வாழ்க்கையில் எத்துணை துன்பம் நேரிடினும், அவனால் மீண்டு வர முடியும். பெற்றோர்கள், காதலர்கள், கணவன்-மனைவி இவற்றை தாண்டிய ஒரு உறவு நட்பு. நம்பிக்கை என்ற தோணி மீது பயணிக்கும் இந்த உறவை பற்றி, தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியானதுண்டு. அவற்றை பற்றி ஒரு ஒரு தொகுப்பு இதோ: கர்ணன்: மஹாபாரத இதிகாசத்தில், நட்பிற்கு ஒரு இலக்கணமாய் வாழ்ந்த கதாபாத்திரம், கர்ணன். தன்னுடைய தன்மனைத்தை காத்தவனுக்காக உயிரை விடத்துணிந்தான்.அந்த கதையை திரைப்படமாக எடுக்க முனைந்த போது, அதில் கர்ணனாக 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசனை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க இயலாது.
நட்பை பாராட்டும் தமிழ் திரைப்படங்கள்
தளபதி: நட்பை பற்றி பேசும் போது, மணிரத்னம் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இந்த திரைப்படத்தை பற்றி கூறாமல் இருக்க முடியாது. இதுவும் கர்ணன் கதையை அடிப்படையாக கொண்டே உருவான திரைப்படம் தான். ரஜினிகாந்த்-மம்மூட்டி இவர்கள் இருவரின் நட்பை பற்றி பேசும் திரைப்படம் இது. நட்புக்காக: சரத்குமார், விஜயகுமார் இணைந்து பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும், இது இருவரின் கேரியரிலும் மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். பால்யத்தில் தொடங்கிய நட்பு, வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் ஏற்படினும் இருவரின் இறப்பு வரை நீடித்தது குறித்து பேசிய திரைப்படம் இது. அண்ணாமலை: ரஜினிகாந்த் - சரத் பாபு நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், இரு நண்பர்களின் நட்பு, சண்டை, பாசம் ஆகியவற்றை சுற்றி நகரும்.