சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் பின்னணியில் வெளியான தமிழ் திரைப்படங்கள்
சிறு வயதில், சர்க்கஸ் போகாத குழந்தைகளே இருக்காது எனலாம். பலவித மிருகங்கள், சாகசங்கள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஜோக்கர்கள் என ஏகப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களோடு மக்களை மகிழ்வித்தனர். பல சர்க்கஸ் கம்பனிகள் இருந்தாலும், அவற்றில் பிரபலமானது 'ஜெமினி' சர்க்கஸ். அவர்கள் நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டனர். அத்தகைய பெருமைமிகு 'ஜெமினி' சர்க்கஸ்சின் உரிமையாளரான 'ஜெமினி' சங்கரன் சமீபத்தில் காலமானார். அவரை பெருமை படுத்தும் விதமாக, இன்று, தமிழ் சினிமாவில், சர்க்கஸ் பின்னணி கொண்டு வெளியான திரைப்படங்களை பற்றி காண்போம்: சந்திரலேகா:'40 களில் வெளியான இந்த திரைப்படம், இன்றும் பிரம்மாண்டத்திற்கு ஒரு முன்னோடி எனக்கூறப்படுகிறது. அந்த படத்தில், நாயகி தனது காதலனையும், காதலையும் காப்பாற்ற, ஒரு சர்க்கஸ் குழுவின் உதவியை நாடுவாள்.
'அப்பு' கமலின் மர்மம் விலகாத அபூர்வ சகோதரர்கள் திரைப்படம்
அபூர்வ சகோதரர்கள்: சூழ்ச்சியால் பிரிந்த இரண்டு ரெட்டையர்கள், தங்கள் தந்தையின் சாவிற்கு பழிவாங்கும் ஒரு கதை. அதில் 'குள்ள' அப்புவாக கமல் நடித்தது எப்படி என்ற கேள்விக்கு விடை இன்றும் மர்மமாகவே உள்ளது. ஏழாம் அறிவு: 'போதி தர்மர்' பற்றிய கதை இது. கொஞ்சம் வரலாறும், கொஞ்சம் புனைவும் கலந்த இந்த திரைப்படத்தை இயக்கியது A .R முருகதாஸ். சூர்யா இந்த படத்தில் ஒரு சர்க்கஸ் கலைஞராக நடித்திருந்தார். மெஹந்தி சர்க்கஸ்: 90களின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒரு சர்க்கஸ் குழுவை வைத்திருக்கும் ஒரு பெண்ணை காதலிக்கும் ஒரு இளைஞனின் கதை.