Page Loader
மறைந்த நடிகர்- இயக்குனர் மனோஜ்குமார் பாரதிராஜாவிற்கு திரையுலகினர் அஞ்சலி
மனோஜ்குமார் பாரதிராஜாவிற்கு திரையுலகினர் அஞ்சலி

மறைந்த நடிகர்- இயக்குனர் மனோஜ்குமார் பாரதிராஜாவிற்கு திரையுலகினர் அஞ்சலி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 26, 2025
10:23 am

செய்தி முன்னோட்டம்

நேற்று மாலை, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் மகனும், நடிகர்- இயக்குனருமான மனோஜ்குமார் பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 48. சில தினங்களுக்கு முன்னர் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த மனோஜிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது உடல் தற்போது நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தொழில்

மனோஜின் தொழில் பயணம்

பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தில் அறிமுகம் ஆன மனோஜ், அதன் பின்னர் அல்லி அர்ஜுனா, சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் படம் இயக்கும் முயற்சியில், இயக்குனர் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றினார். எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப்பாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 -இல் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகம் ஆனார். நடிகராக அவர் கடைசியாக கார்த்தி நடித்த விருமான் படத்தில் நடித்திருந்தார். மனோஜின் மனைவி நந்தனாவும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.