
'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நடிகர் விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2017-இல் தொடங்கப்பட்ட திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை தூண்டிய இந்த படம், பல காரணங்களால் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, வரும் நவம்பர் 24ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
எனவே, 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், வரும் அக்டோபர் 24ஆம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
கௌதம் வாசுதேவ் மேனனின் ட்விட்டர் பதிவு
The Trailer of #DhruvaNatchathiram is playing exclusively at theatres near you! And releasing online on 24th October.@chiyaan @Jharrisjayaraj @OndragaEnt @oruoorileoru pic.twitter.com/bFNqFWlDnl
— Gauthamvasudevmenon (@menongautham) October 21, 2023