ஜப்பானின் ஷிசிடோ நிறுவனத்திற்கு இந்திய தூதராக தமன்னா நியமனம்
ஜப்பானின் புகழ்பெற்ற அழகு சாதன பொருட்கள் நிறுவனமான ஷிசிடோ, இந்தியாவிற்கான தன் விளம்பர தூதராக தமன்னாவை நியமித்துள்ளது. ஷிசிடோ நிறுவனம் இந்த வருட தொடக்கத்தில் இந்தியாவில் தனது பொருட்களை அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்தது. தற்போது அதன் விளம்பர தூதராக தமன்னாவை அறிவித்துள்ளது. இதுகுறித்து நடிகை தமன்னா கூறுகையில், "ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அழகு சாதன பொருட்களில் சிறந்து விளங்கும் ஷிசிடோ நிறுவனத்துடன் இணைவது மகிழ்ச்சி". "தரம், புதுமை, தனித்துவத்தை கொண்டாடுவதில் ஷிசிடோ கொண்டுள்ள அர்ப்பணிப்பு என்னுடன் தனிப்பட்ட அளவில் ஒத்துப் போகிறது". "அழகு என்பது வெளித்தோற்றம் மட்டுமல்ல, உங்களைக் குறித்து நீங்கள் நம்பிக்கையுடனும் அதிகாரத்துடனும் உணர்வது தான் என நான் நம்புகிறேன்" எனக் கூறியிருந்தார்.