சீன் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி: வீடியோ வெளியிட்டு நடிகர் சூர்யா நெகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியாகித் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள சீன் திரைப்படத்தைக் கொண்டாடிய ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சூர்யா வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். வீடியோ பதிவில் பேசிய சூர்யா, "என் அன்பு ரசிகர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும். திரையரங்குகளுக்கு வந்து 'சீன்' படத்தைப் பார்த்து, ஒவ்வொரு காட்சியையும் விவாதித்து, திருவிழாவைப் போலக் கொண்டாடிப் பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளீர்கள். பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் நடிகர்கள், இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் அதிகம் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இந்த வெற்றியை எங்களை விட நீங்களே அதிகமாகக் கொண்டாடியுள்ளீர்கள்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களுக்கு நன்றி
'சீன்' திரைப்படத்திற்குப் பிற மொழி ரசிகர்களும் அளித்த அமோக ஆதரவை நினைவுகூர்ந்த சூர்யா, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குத் தனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தின் வெற்றிக்குத் துணை நின்ற திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள், திரை விமர்சகர்கள், சமூக வலைதளப் பிரபலங்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் படக்குழு சார்பில் நன்றி தெரிவித்த அவர், இந்த ஆண்டு தனக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துவிட்டதாகவும், விரைவில் மற்றொரு சிறப்பான திரைப்படத்துடன் மீண்டும் சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஹாட்ரிக் வெற்றி
கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் வரிசையில் சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி
மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜித்து மாதவன் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள சீன் திரைப்படத்தில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள நிலையில், நஸ்ரியா மற்றும் நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுஷின் ஷ்யாம் இசையமைப்பில் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அதன் வித்தியாசமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
முன்னதாக வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சீன் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று சூர்யாவுக்குத் தொடர் வெற்றிகளைப் பரிசளித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
A Special Note from ‘THE ONE’ @Suriya_offl ❤️
— Zhagaram Studios (@ZhagaramOffl) November 21, 2026
Thank You All! Your Love and Support Made #SCENE a Truly Special Blockbuster! @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @2D_ENTPVTLTD @SonyMusicSouth pic.twitter.com/daWmIrKA82