
சூர்யா 45: RJ பாலாஜியின் மூக்குத்தி அம்மனின் தொடர்ச்சியாக இருக்க போகிறதா?
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறை வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது இந்த படம்.
அதனையடுத்து, அவர் R.J.பாலாஜியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் இணையத்தில் கசிந்த தகவலின் படி, RJ பாலாஜியின் முந்தைய இயக்கமான மூக்குத்தி அம்மனின் தொடர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
மூக்குத்தி அம்மனின் தொடர்ச்சியாக அவர் மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்கவிருந்ததாகவும், அதில் த்ரிஷாவை நாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும், எனினும் அந்த திட்டம் ஈடேறவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதே கதையில் சில மாறுதல்களை செய்து சூர்யாவை நடிக்கவைக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
As per Valaipechu,#Suriya45 is said to be a Divine Fantasy entertainer, in the lines of MookuthiAmman😳
— AmuthaBharathi (@CinemaWithAB) October 18, 2024
RJBalaji has previously planned MaasaaniAmman with Trisha, has now changed the script to Male #Suriya version with the required inputs to story👀🔥 pic.twitter.com/QUUFf5Dilo