சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் மற்றொரு கேங்ஸ்டர் திரைப்படம்; படப்பிடிப்பு துவங்கியது
நடிகர் சூர்யா, 'கங்குவா' திரைப்படத்திற்கு அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் கை கோர்த்துள்ளார். 'சூர்யா 44' என்று தற்காலிகமாக தலைப்பிட்டுள்ள இந்த திரைப்படத்தினை சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்ட படக்குழுவினர், நேற்று இரவு 44 நொடி வீடியோ ஒன்றினை வெளியிட்டு, இப்படத்தின் ஷூட்டிங் துவங்கியது என அறிவித்தனர். அந்த வீடியோவில் சூர்யா ரெட்ரோ லுக்கில் கடலை நோக்கி அமர்ந்திருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கேங்ஸ்டர் திரைப்படங்களாக எடுத்து வரும் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திலும் அதே போன்றதொரு கதைக்களத்தை தேர்வு செய்துள்ளார். 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு அந்தமான் நிக்கோபார் தீவில் நடைபெறுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.