Loading...
ஜெயிலர் 2 படத்தின் முதல் கேரக்டர் Intro! ரஜினி படத்தில் மிரட்டலான வில்லனாக சுராஜ் வெஞ்சரமூடு அறிமுகம்
ஜெயிலர் 2 படத்தின் முதல் கேரக்டர் அறிமுக வீடியோ வெளியீடு

ஜெயிலர் 2 படத்தின் முதல் கேரக்டர் Intro! ரஜினி படத்தில் மிரட்டலான வில்லனாக சுராஜ் வெஞ்சரமூடு அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 18, 2026
07:23 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு திலீப் என்ற மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த அறிமுக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மிரட்டலான என்ட்ரி

சிசார் புகையுடன் மிரட்டலான என்ட்ரி கொடுத்த சுராஜ்

வெளியாகியுள்ள 30 வினாடி அறிமுக வீடியோவில், காரில் அமர்ந்து சிசார் புகையை ஊதியபடி சுராஜ் வெஞ்சரமூடு கெத்தாக என்ட்ரி கொடுக்கிறார்.

முதல் பாகத்தில் விநாயகன் ஏற்று நடித்த வர்மன் கதாபாத்திரத்தைப் போல, இந்த இரண்டாம் பாகத்தில் சுராஜ் வெஞ்சரமூடுவின் திலீப் கதாபாத்திரம் மிகக் கொடூரமான வில்லத்தனம் கொண்டதாக இருக்கும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.

அனிருத்தின் பின்னணி இசையுடன் வெளியாகி உள்ள இந்த காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

எதிர்பார்ப்பு

நட்சத்திர பட்டாளங்கள் மற்றும் பிரமாண்ட எதிர்பார்ப்பு

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த பல முன்னணி நட்சத்திரங்களுடன், இரண்டாம் பாகத்தில் சுராஜ் வெஞ்சரமூடு உட்பட மேலும் பல புதிய தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அடுத்த அப்டேட்

விரைவில் வெளியாகவுள்ள அடுத்தடுத்த அப்டேட்கள்

தற்போது ஜெயிலர் 2 உலகத்தின் கதாபாத்திரங்களை வரிசையாக படக்குழுவினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

சுராஜ் வெஞ்சரமூடின் திலீப் கதாபாத்திர அறிமுகத்தைத் தொடர்ந்து, படத்தில் நடித்துள்ள பிற முக்கிய பிரபலங்களின் கேரக்டர் போஸ்டர்கள் மற்றும் அறிமுக வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வெளியீடு ஜெயிலர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

ADVERTISEMENT