Page Loader
தனது சகோதரரின் 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
தனது சகோதரரின் 80வது பிறந்தநாளை கொண்டாடிய சூப்பர்ஸ்டார்

தனது சகோதரரின் 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2023
08:32 am

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளை, நேற்று (பிப்.,19) கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு உணர்ச்சிகரமான பதிவை இட்டுள்ளார் ரஜினிகாந்த். ரஜினி, தனது சகோதரரிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. தன் வாழ்க்கையில், தான் எடுக்கும் அனைத்து முக்கிய முடிவுகளும், அவருடன் கலந்தாலோசித்து தான் எடுப்பார், ரஜினி. தான் திரையுலகில் கால் வைக்க நினைத்ததிலிருந்து, அரசியலில் இறங்க நினைத்தது வரை அனைத்துமே, சத்யநாராயண ராவின் ஆசியும், ஆலோசனையும் பெற்ற பிறகே முடிவெடுத்தார் ரஜினி. இவ்விழாவில், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கலந்து கொண்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

சகோதரரின் 80-வது பிறந்த நாளை, முன்னின்று நடத்தி வைத்த ரஜினி