குறி வச்சி இரை விழுந்ததா? வேட்டையன் படம் குறித்து ரசிகர்களின் சமூக வலைதள விமர்சனம் இதுதான்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஜெய் பீம் படம் மூலம் அனைவரையும் கவர்ந்த இயக்குனர் டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கிய இரண்டாவது படமான வேட்டையன் படத்தின் நடிகர் ரஜினிகாந்த் முதன்மை வேடத்தில் நடித்துள்ள நிலையில், அமிதாப் பச்சன், ராணா டக்குபதி மற்றும் ஃபகத் பாசில் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில், சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் நாள் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளில் குவிந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்துள்ள வேட்டையன் ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா? ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைத்து வரும் விமர்சனங்கள் இங்கே பின்வருமாறு:-