'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிப்பாளர் RB சௌத்திரி சாலை விபத்தில் காலமானார்
செய்தி முன்னோட்டம்
திரையுலகில் நூற்றுக்கணக்கான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகர் ஜீவாவின் தந்தையும், 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளருமான அவர், ராஜஸ்தானில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் சென்னைக்கு எடுத்து வரப்போவதாக நியூஸ்18 செய்தி தெரிவிக்கிறது. நாட்டாமை, புது வசந்தம், பூவே உனக்காக உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஆர்.பி. சௌத்திரி. இவருக்கு ஜித்தன் ரமேஷ் என்றும் ஒரு மகன் உள்ளார். அவரும் தமிழ் சினிமாவில் நடிகராக உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஆர்.பி.சௌத்ரி காலமானார்#RBChoudary #SuperGoodFilms #Jiiva #Kollywood #RIP #ProducerRBChoudary #Kumudamnews24x7 https://t.co/kN2vaurqhz pic.twitter.com/PuEDkd8qsR
— Kumudam News 24x7 (@kumudamNews24x7) May 5, 2026