LOADING...
ஆடியோ லாஞ்சை தெறிக்க விட்ட அனிருத்-தீப்தி சுரேஷ் காம்போ; வேட்டையன் ஆடியோ ரிலீஸ் கிளிம்ப்ஸை வெளியிட்ட படக்குழு
வேட்டையன் திரைப்படம்

ஆடியோ லாஞ்சை தெறிக்க விட்ட அனிருத்-தீப்தி சுரேஷ் காம்போ; வேட்டையன் ஆடியோ ரிலீஸ் கிளிம்ப்ஸை வெளியிட்ட படக்குழு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 08, 2024
01:38 pm

செய்தி முன்னோட்டம்

அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது. இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படத்திற்க்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே நன்றாக வந்துள்ள நிலையில், சன் நெக்ஸ்ட் தனது எக்ஸ் பக்கத்தில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனசிலாயோ அனிருத் மற்றும் தீப்தி சுரேஷ் பாடும் காணொளியை வெளியிட்டுள்ளது. இதேபோல், முழு ஆடியோ வெளியீட்டு விழாவையும், சிறுசிறு பகுதியாக பிரித்து சன் நெக்ஸ்டின் சமூக வலைதளங்களில் வெளியிட்டு புரமோஷன் செய்து வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

அனிருத்-தீப்தி சுரேஷ் பாடும் வீடியோ